இந்தியன் 2 படமிடம் தோற்றுப்போன தக் லைஃப்! பரிதாபகரமான நிலையில் கலெக்சன் ரிப்போர்ட்?

3 weeks ago 28
ARTICLE AD BOX

நெகட்டிவ் விமர்சனங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான “தக் லைஃப்” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. “நாயகன்” திரைப்படத்திற்குப் பிறகு மணிரத்னம்-கமல்ஹாசன் காம்போவில் வெளிவருவதால் இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. 

ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. திரைக்கதையில் எந்த வித சுவாரஸ்யமும் இல்லை என்றும் தமிழ் சினிமாவில் அடிக்கடி சொல்லப்பட்ட சலித்துப்போன கதை எனவும் ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்கின்றனர். இதனால் இத்திரைப்படத்திற்கு வரவேற்பு குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூலும் பாதிப்படைந்துள்ளது. 

thug life opening day collection is low than indian 2 movie opening

இந்தியன் 2 படத்தை விட குறைவு

அதாவது “தக் லைஃப்” திரைப்படம் நேற்று முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.17 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால் கமல்ஹாசன் நடிப்பில் இதற்கு முன்பு வெளிவந்த “இந்தியன் 2” திரைப்படத்தின் முதல் நாள் இந்திய வசூல் என்பது ரூ.25 கோடியாகும். அந்த வகையில் “தக் லைஃப்” திரைப்படத்திற்கு சுமாரான ஓப்பனிங்கே கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். எனினும் “தக் லைஃப்” திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாததால்தான் வசூல் குறைவாக உள்ளது என சிலர் கூறுகின்றனர். 

  • thug life opening day collection is low than indian 2 movie opening இந்தியன் 2 படமிடம் தோற்றுப்போன தக் லைஃப்! பரிதாபகரமான நிலையில் கலெக்சன் ரிப்போர்ட்?
  • Continue Reading

    Read Entire Article