இந்தியா நினைத்தால் பாகிஸ்தானை உலக வரைபடத்தில இருந்தே தூக்கிவிடும் : அண்ணாமலை!

2 hours ago 2
ARTICLE AD BOX

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது

பாகிஸ்தான் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்களை கொலை செய்துள்ளனர். துணை ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரியையும் கொலை செய்துள்ளனர்.

இதையும் படியுங்க: என் காரை நிறுத்தி நீங்கள் கேள்வி கேட்கலாம்.. உங்களுக்கு உரிமை இருக்கு : ராஜேந்திர பாலாஜி பேச்சு!

டிரோன்களை நமது நாட்டுக்குள் அனுப்பி தாக்குதல் நடத்திய உள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்த தவறுக்கு பாகிஸ்தானில் இருக்கக்கூடிய தீவிரவாதிகள் மீது மட்டும் தாக்குதல் நடத்துகின்றனர்.

பாகிஸ்தான் என்ன செய்கிறது இந்தியாவில் உள்ள அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்தியா மிகப் பெரிய பொருளாதார நாடு. இந்தியாவின் பொருளாதாரத்தில் 12 ல் ஒரு பங்கு தான் பாகிஸ்தான் பொருளாதாரம்.

நாம் எந்த நாட்டின் எல்லையை பிடிப்பதற்காக சண்டை போடவில்லை. நமது நாட்டு மீது நடத்தப்பட்டுள்ள தீவிரவாத தங்கள் மீது தாக்குதல் நடத்துகிறோம்.

இந்தப் போர் இன்றோ, நாளையோ முடிவடைய போவது கிடையாது. இந்தப் போர் தீவிரவாதத்திற்கு எதிரான நடக்கிறது. இது இப்போது முடியாது. இந்தியாவின் நடவடிக்கை பார்த்த பிறகு பாகிஸ்தான் இந்தியாவில் ஓர் உயிரை எடுப்பதற்கு பயப்பட வேண்டும்.

பாகிஸ்தான் நாடு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இல்லை. பாகிஸ்தானில் நாட்டுக்கு ராணுவம் அல்ல. ராணுவத்திற்கு ஒரு நாடு. ராணுவம் தான் அந்த நாட்டு அரசை கட்டுப்படுத்துகிறது.

அரசின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் இல்லை. பாகிஸ்தான் ஒரு பெரிய நாடே கிடையாது. இந்தியாவின் பொருளாதாரத்தில் 12ல் ஒரு பங்கு கொண்ட நாடு. பாகிஸ்தான் என்ற நாடு வரைபடத்தில் இருக்காது.

தமிழகத்தில் முதல்வர் ராணுவ வீரர்களுக்காக முன்னெடுக்கும் பேரணி வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முதல்வரும் இந்திய அரசுக்கு இந்த நேரத்தில் தனது முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும்.

Pakistan can be wiped off the world map says Annamalai!

தமிழக அரசு 4 ஆண்டு சாதனை கொண்டாடுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழகத்தில் வேதனையான நான்காண்டுகள். தமிழகத்தின் பொருளாதாரத்தில் நாம் பின் நோக்கி செல்கிறோம். இன்றைய சூழ்நிலையில் அரசியல் பற்றி நாம் பேச வேண்டாம் அது வேறு மாறியாக மாறிவிடும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

  • good bad ugly movie is loss to producer குட் பேட் அக்லி செம கலெக்சன், ஆனா நஷ்டம்? குட்டையை குழப்பிய பிரபலம் 
  • Continue Reading

    Read Entire Article