ARTICLE AD BOX
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதையடுத்து இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டது. பாகிஸ்தானும் பல இடங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தானும் சண்டை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பம் தனது X தளத்தில் பதிவிட்டார்.
இதையடுத்து பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டது. இரவு முழுக்க பேச்சுவார்தை நடந்தததாகவும், இருநாடுகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும், இது மகிழ்ச்சி தருகிறது என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

அதே போல செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, போர் நிறுத்தத்தை உறுதி செய்தார். நிலம், வான், கடல் என அனைத்து தரப்பிலான தாக்குதல்களும் மாலை 5 மணி முதல் நிறுத்தப்பட்டதாகவும், மதிய 3.35 மணிக்கு இரு நாட்டு ராணுவமும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார்.
துப்பாக்கிச்சண்டையும், ராணுவ நடவடிக்கையும் உடனே நிறுத்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும், ராணுவ அளவிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை மே 12ஆம் தேதி மீண்டும் நடைபெற உள்ளதாக குறிப்பிட்டார்.
