இந்தியில் டப் செய்வாங்களா..ஆனால் இந்தி வேண்டாமா..பவன் கல்யாண் விளாசல்.!

3 hours ago 1
ARTICLE AD BOX

பாலிவுட் பணத்தை மட்டுமே விரும்புகிறார்களா?

தமிழக அரசியல்வாதிகள்,இந்தி மொழியை ஏற்க மறுக்கின்றனர்,ஆனால் பாலிவுட்டில் இருந்து வரும் பணத்தை மட்டும் விரும்புகிறார்கள் என்று ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்க: கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!

இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் இந்தி திணிப்பை எதிர்ப்பது,பிற மொழிகளை வெறுப்பது அல்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஜன சேனா கட்சியின் 12ஆம் ஆண்டு விழாவில் பேசும் போது பவன் கல்யாண்,இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகள் இருப்பது நல்ல விஷயம்,மொழி பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்,ஆனால் சிலர் சமஸ்கிருதத்தை விமர்சிக்கின்றனர்,தமிழக அரசியல்வாதிகள் இந்தியை ஏன் எதிர்க்கிறார்கள் என புரியவில்லை.

ஆனால் அவர்கள் தமிழ் படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட அனுமதிக்கிறார்கள்,பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் மட்டும் தேவை,ஆனால் அவர்களுக்கு இந்தி தேவையில்லை,இது என்ன வகையான லாஜிக்? என்று கேள்வி எழுப்பினார்.

பவன் கல்யாணின் இந்த விமர்சனத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ளார்,அவர்,இந்தி மொழியை எங்களின் மீது திணிக்காதீர்கள் என்று கூறுவது,வேறு மொழிகளை வெறுக்கிறோம் என்று அர்த்தமல்ல,தாய் மொழியை தாயைப் போல் சுயமரியாதையுடன் காக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பவன் கல்யாணின் இந்த கருத்துகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.தமிழ் திரையுலகத்தினர் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இந்தியில் டப் செய்யப்படும் திரைப்படங்களை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்கான கட்டாயம் இல்லை,ஆனால் இந்தியை படிக்க வேண்டும் என்ற கட்டாயம் வருகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • Pawan Kalyan Hindi Controversy இந்தியில் டப் செய்வாங்களா..ஆனால் இந்தி வேண்டாமா..பவன் கல்யாண் விளாசல்.!
  • Continue Reading

    Read Entire Article