ARTICLE AD BOX
இந்துக்கள் நான்காவது குழந்தையை பெற்றால் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் என்பவர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பகவான் ராமரின் இராணுவ படை என்று அழைக்கப்படும் ஸ்ரீராம் சேனா அமைப்பின் பொதுக்குழு கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக், “ஸ்ரீராம் சேனா அரசியலில் ஈடுபடாது. ஆனால் தர்மத்திற்கு எதிரான நாத்திகர்களை வீட்டிற்கு அனுப்பும்” என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “இந்துக்கள் 3 ஆவது குழந்தை பெற்றால் ரூ.1 லட்சமும் நான்காவது குழந்தை பெற்றால் ரூ.2 லட்சமும் வழங்கப்படும்” எனவும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழகத்தில் மதமாற்றம் அதிகளவில் நடக்கிறது. அதற்கு திமுக அரசு ஆதரவாக உள்ளது” எனவும் அவர் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
