ARTICLE AD BOX
தங்கம் என்ற சொல்லை உதட்டளவு இனி உச்சரிக்கத்தான் முடியும் என்பது போல தினமும் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை ஷாக்காக்கி உள்ளது.
ஒவ்வெரு நாளும் விலை கூடுதலால், ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க மாட்டோமோ என்ற சாமானியன் ஏக்கம் தினமும் அதிகரித்து வருகிறது.
இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!
2024ல் 60 ஆயிரத்திற்கும் கீழாக இருந்த தங்கம் விலை, 2025ஆம் ஆண்டு தொடக்கம் முதலே ஏறி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 320 ரூபாயாக விலை உயர்ந்து.
பின்னர் பிப்ரவரி 11ஆம் தேதி முதல் முறையாக 64,480 ரூபாயாக அதிகரித்து அதிர்ச்சி அளித்தது. தொடர்ந்து மார்ச் 14ஆம தேதி 65 ஆயிரத்து 840 ரூபாயாகவும், மாலையில் 66 ஆயிரத்து 400 ரூபாயாகவும் யர்ந்து.
அந்த வகையில் இன்று தங்கம் ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,510க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,080க்கும் விறப்னையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.113க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இன்னும் உயரக்கூடும் என்றும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரம் வரை செல்ல வாய்ப்புள்ளதாக சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.

7 months ago
57









English (US) ·