இனி குட் பேட் அக்லிக்கு மூடு விழாதான்! மூணே வாரத்துல இப்படி சோலியை முடிச்சிட்டாங்களே?

1 week ago 14
ARTICLE AD BOX

ரசிகர்களுக்கான திரைப்படம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் அஜித் ரசிகர்களின் மத்தியில் கொண்டாடப்பட்ட திரைப்படமாக அமைந்தது. ஆனால் வெகுஜன ரசிகர்கள் இத்திரைப்படம் பழைய அஜித் திரைப்படங்களில் வந்த காட்சிகளை எல்லாம் கோர்த்து எடுத்தது போல் இருப்பதாக விமர்சித்தனர். எனினும் அஜித் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் ஒரு கொண்டாட்டமான திரைப்படமாக அமைந்தது. 

good bad ugly movie closes the box office in tamilnadu

வசூலை வாரிக்குவித்த குட் பேட் அக்லி

இத்திரைப்படம் வெளிவந்து மூன்று வாரங்கள் முடிவடையவுள்ள நிலையில் இத்திரைப்படம் ரூ.227 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை மே தினத்தை முன்னிட்டு சூர்யாவின் “ரெட்ரோ”, சசிகுமாரின் “டூரிஸ்ட் ஃபேமிலி” போன்ற திரைப்படங்கள் வெளிவருகின்றன. 

இதில் “ரெட்ரோ” திரைப்படத்திற்கு அதிகளவு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள திரையரங்குகளில் “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த இரண்டு திரைப்படங்களுக்குமே அதிகளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். 

good bad ugly movie closes the box office in tamilnadu

அந்த வகையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்கான திரையரங்குகள் சொற்பமாக குறைக்கபடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், திருச்சி, சேலம் போன்ற திரையரங்குகள் அதிகளவில் இருக்கும் நகரங்களில் ஒரு ஷோவோ அல்லது இரண்டு ஷோக்களோ  “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்க்கு ஒதுக்கப்படும் எனவும் இந்நகரங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்கு மூடு விழா நடத்தப்படும் எனவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இந்த நிலையில் மூன்றே வாரங்களில் “குட் பேட் அக்லி” திரைப்படம் விடைபெறவுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

  • Actor Ajith admitted to Apollo Hospital அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?
  • Continue Reading

    Read Entire Article