ARTICLE AD BOX
AI டப்பிங் – டப்பிங் கலைஞர்களுக்கு அபாயமா?
AI டப்பிங் தொழில்நுட்பம் தற்போது சினிமா மற்றும் டிஜிட்டல் கன்டென்ட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது,குறிப்பாக ஒரு மொழியில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை வேறொரு மொழிக்கு டப்பிங் செய்வதில் இதனுடைய பங்கு மிகப்பெரிய அளவில் உள்ளது.
இதையும் படியுங்க: களைகட்டிய ‘வாடிவாசல்’..ஜி வி வெளியிட்ட பதிவு..சூர்யா ரசிகர்கள் ஹாப்பி.!
இதுவரை டப்பிங் கலைஞர்களின் குரல் மூலம் மொழிமாற்றம் செய்யப்படும் நிலையில்,AI டப்பிங் மூலம் மிகக் குறைந்த செலவில் மற்றும் வேகமாக எந்த மொழியில் வேண்டுமானாலும் திரைப்படங்களை டப்பிங் செய்ய முடியும்,இதனால் Amazon Prime போன்ற பல நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை பயனுள்ளவாறு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

இதன் மூலம் ஒரே ஒரு மொழியில் தயாரிக்கப்பட்ட படங்கள் பல்வேறு மொழிகளில் வெளியிட்டு உலகளவில் பரவலாக பார்க்கப்படும் என்பதால் வணிக ரீதியாக பெரும் வளர்ச்சி கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.ஆனால்,இதனால் டப்பிங் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறைய வாய்ப்புள்ளதாகவும்,மனித குரலின் உணர்ச்சி பூர்வமான வெளிப்பாடுகளை AI முழுமையாக வழங்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தற்காலிகமாக, AI டப்பிங் ஒரு பிரபலமான தீர்வாக கருதப்பட்டாலும்,உண்மையான குரலின் தன்மை மற்றும் பார்வையாளர்களின் அனுபவத்தை மாற்றும் வகையில் இது எவ்வாறு செயல்படும் என்பது போக போக தெரிய வரும்.
