ARTICLE AD BOX
கம் பேக் கொடுக்கும் சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா,இவர் நாக சைதன்யாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பிறகு பெரிதாக படங்களில் நடிக்க கமிட் ஆகாமல் இருந்தார்.
இதையும் படியுங்க: நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ…மூக்குத்தி அம்மன் 2 படத்தில் தரமான சம்பவம் இருக்கு.!
அதுமட்டுமில்லாமல் மயோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வந்தார்,அதிலிருந்து மெல்ல மெல்ல குணமாகி தற்போது வெப் தொடர்கள் மற்றும் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
மேலும் நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் விரைவில் பண்ண உள்ளார் என்ற வதந்தியும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் இனிமேல் நடிப்பில் இடைவெளி எடுக்க மாட்டேன்,சினிமா தான் என்னுடைய முதல் காதல்,சினிமாவை நான் மிகவும் நேசிக்கிறேன்,இனி நடிப்பிற்கு ஓய்வு கொடுக்க மாட்டேன்,மீண்டும் உங்கள் சமந்தா தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என பேசியிருப்பார்.
இப்போது ரகத் பிரம்மாண்டு வெப் தொடரில் நடித்து வருகிறேன்,அடுத்து இன்னொரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளேன் என சமைத்த கூறியிருக்கிறார்.