ARTICLE AD BOX
தற்போதெல்லாம் ஒரு படம் ஹிட் ஆனாலே, நடிகர் நடிகைகள் கொடுக்கும் பில்டப்புக்கு எல்லையே இல்லை. நடிகைகள் தயாரிப்பாளர்களிடம் கறார் காட்டுவதும், நடிகர்களோ எனக்கு இவங்க தான் வேணும் என அடம்பிடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
ஒரு படத்தில் நடிகர்கள் முதல் டெக்னீசியன் வரை தேர்வு செய்வது இயக்குநர்கள்தான். இதில் அவ்வப்போது தயாரிப்பாளர் தலையீடு இருக்கும். அதைவிட நடிகர்களே எனக்கு இந்த நடிகைதான் வேணும் என கேட்டு பெறுவதும் உண்டு.
இப்படித்தான் அண்மையில் வெளியான டிராகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால், என் படத்தில் 3 நடிகைகளை ஒப்பந்தம் செய்யுங்கள் என அடம்பிடிக்கிறாராம் பிரதீப்.
கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்நாதன், பின்னர் லவ் டுடே படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருந்தார். இரண்டு படங்களுமே ஹிட்.
இதையடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்த டிராகன் படம் வசூலில் மாஸ் காட்டியது. இந்த படத்தில் அனுபமா, கயாடு லோகர், இவானா என மூன்று பேர் உள்ளனர்.
இதையடுத்து LIK படத்தில் நடித்து வரும் பிரதீப்புக்கு தற்போது மவுசு கூடியுள்ளது. இதனால் அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். சுதா கொங்கராவின் உதவி இயக்குநரான கீர்ஙத்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் அனு இம்மானுவேல், சீரியல் நடிகை ஐஸ்வர்யா ஷர்மா என 3 நடிகைகளை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.