ARTICLE AD BOX
ஏ ஆர் முருகதாஸ்- சிவகார்த்திகேயன் கூட்டணி
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள “மதராஸி” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் வித்யுத் ஜம்வால், பிஜு மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.

மதராஸி படத்தின் முதல் சிங்கிள் பாடல்?
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “சலம்பல” என்ற பாடல் ஜூலை 31 (இன்று) மாலை 6 மணிக்கு வெளியாகும் என நேற்றைய முன் தினமே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று ரசிகர்கள் பலரும் மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் படக்குழுவினரோ இப்பாடல் இன்று இரவு வெளியாகும் என பொத்தாம் பொதுவாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கடுப்பில் மூழ்கியுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில் மாலை 6 மணிக்கு இப்பாடல் வெளியாகவில்லை. எனினும் இப்பாடல் இன்று இரவு எப்போது வெளிவரும் எனவும் குறிப்பிட்டதாக தெரியவில்லை. அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த “சலம்பல” என்ற பாடலை சாய் அப்யங்கர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) July 31, 2025