ARTICLE AD BOX
1990களிலும் 2000ங்களிலும் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் சங்கீதா. இவர் பிரபல பாடகரான கிரிஷை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஒரு மகளும் உள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அதாவது நடிகை சங்கீதா தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் பெயரை இதற்கு முன் சங்கீதா கிரிஷ் என்று வைத்திருந்ததாகவும் தற்போது Sangitha.act என்று வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜனவரி மாதத்திற்கு பிறகு தனது கணவருடன் எடுக்கப்பட்ட எந்த புகைப்படத்தையும் சங்கீதா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடவில்லை எனவும் கூறுகின்றனர். இதனை கொண்டு இருவரும் விவாகரத்து பெறவுள்ளதாகவும் ரசிகர்கள் செய்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு செய்தியையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சங்கீதா, சமீபத்தில் தமிழில் “வாரிசு”, “தமிழரசன்” போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டா பெயரில் மாற்றம்? கிரிஷிடம் இருந்து விவாகரத்து பெற்ற சங்கீதா? என்னப்பா சொல்றீங்க!

2 months ago
32









English (US) ·