இன்ஸ்டாகிராமில் நிர்வாண வீடியோ… முதல்முறையாக மகிழ்ச்சியை பகிர்ந்த நடிகர் ஸ்ரீ!

3 weeks ago 31
ARTICLE AD BOX

வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, உடல்நலக்குறைவு காரணமாக பாதியில் வெளியேறினார்.

ஆனால் படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீக்கு சரிவர பணம் கொடுக்காததாலும், வந்த வாய்ப்புகளை பறிபோனதாலும், மன உளைச்சலுக்கு ஆளானதால் குடும்பத்தினரை விட்டு வெளியேறி சில வீடியோக்களை தனது இனஸ்டாக கணக்கில் ஒல்லியாக, போதைக்கு அடிமையான நபரை போல காட்சியளித்தார்.

இதையும் படியுங்க: அவமானம்.. நிழல் முதலமைச்சர் சபரீசன் : CM குடும்பத்துக்கு பலன் கொடுக்கும் விண்வெளி கொள்கை.. அண்ணாமலை காட்டம்!

அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து வெளியான வீடியோக்கள் ரசிகர்களை ஷாக் ஆக்கியது. அரை நிர்வாணமாக இருந்த ஸ்ரீ தனது வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தனது உடல், மொழி என வித்தியாசமாக காட்சியளித்தது காண்போர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது..

இவரை பற்றி தொடர்பு கிடைத்தால் உதவி செய்யுங்கள். தகுந்த சிகிச்சை அளிக்க குடும்பத்தினர், நண்பர்கள் தயாராக உள்ளதாக அண்மையில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்திருந்தார்.

இதனிடையே நேற்று திடீரென தனது இன்ஸ்டா கணக்கில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் ஸ்ரீ, 1 வருஷம் 4 மாதம் ஆச்சு.. நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி… நீங்களும் சிகரெட் பிடிக்காதீர்கள் என அட்வைஸ் செய்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீ கிடைத்துவிட்டதாகவும், தற்போது மருத்துவர் கண்காணிப்பில் உள்ளதாக குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது x தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Actor Sri Caught By Families

மேலும் ஸ்ரீயை பற்றி தவறாக எதுவும் பதிவிட வேண்டாம், நடிகர் ஸ்ரீராமின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்புவதை அனைவரும் தவிர்க்க வேண்டும், ஊகங்கள் மற்றும் தவறான தகவல்கள் நடிகர் ஸ்ரீக்கு மன உளைச்சலாம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது, உடல்நலம் பெற்று திரும்புவதில் நடிகர் ஸ்ரீ கவனம் செலுத்தி வருகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த ரசகிர்கள், நெட்டிசன்கள், அவர் மீண்டு வந்து மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என வேண்டிக்கொள்கின்றனர்.

  • Actor Sri Caught By Families இன்ஸ்டாகிராமில் நிர்வாண வீடியோ… முதல்முறையாக மகிழ்ச்சியை பகிர்ந்த நடிகர் ஸ்ரீ!
  • Continue Reading

    Read Entire Article