ARTICLE AD BOX
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த பதிவில், கீழடி ஆய்வுகள் குறித்து , தமிழக முன்னாள் முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை கேலி செய்து , அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக கடுமையாக விமர்சித்து கருத்து பதிவித்திருந்தனர்.
இதையும் படியுங்க: 14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. தாலி கட்டிய ரவுடி கைது!
அமைச்சர் டிஆர்பி. ராஜா தலைமையிலான ஐடி விங்கின் இந்த அற்பதமான செயல் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் திமுக ஐடி விங்க் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் காவல் துறையில் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் , காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில், அமைச்சர் டி ஆர் பி ராஜா மீதும் திமுக ஐடி விங் பிரிவினர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், கழக அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, மாநில இளைஞர் அணி இணை செயலாளர் எஸ் எஸ் ஆர் சத்யா, அதிமுக கழக தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சதீஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி ஆர் மணிவண்ணன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன், மாநகர கிழக்கு பகுதி செயலாளர் பாலாஜி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
