ARTICLE AD BOX
கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட யானை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரில் அமைந்துள்ள அஷ்டலிங்க ஆதிகேசவ செல்வ விநாயகர் கோவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவில் ஆகும். இந்த ஆண்டு வருகிற ஜூலை 2 ஆம் தேதி இக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் நடிகை திரிஷா இக்கோயிலுக்கு இயந்திர யானையை தானமாக வழங்கியுள்ளார். இந்த யானைக்கு “கஜா” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இயந்திர யானையை திரிஷாவும் People for Cattle in India என்ற அமைப்பும் இணைந்து வழங்கியுள்ளது.
ஒரு யானை இவ்வளவு லட்சமா?
இந்த இயந்திர யானை, நிஜ கோயில் யானை செய்யும் செயல்களை அப்படியே செய்கிறது. அதாவது தனது தும்பிக்கையால் நீரை பீய்ச்சி அடிக்கிறது, பக்தர்களை ஆசீர்வாதம் செய்கிறது. இந்த இயந்திர யானை தமிழ்நாட்டில் முதன்முதலாக வழங்கப்பட்டுள்ளதாக People for Cattle in India அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன் கேரளாவில் உள்ள கோயிலுக்கு தங்களது அமைப்பால் ஒரு இயந்திர யானை தானமாக வழங்கப்பட்டது எனவும் கேரளாவில் தயாரிக்கப்பட்ட இந்த யானை ரூ.6 லட்சம் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த இயந்திர யானையை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் வியந்து பார்த்து வருகின்றனர்.