இயல்பை விட பருவமழை வெளுத்து வாங்கும்.. பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!

6 months ago 113
ARTICLE AD BOX
Red Alert

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கனமழைக்கான வாய்ப்பும், ஒரு சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதலே மழை பெய்ய தொடங்கும் என்றும் நாளை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: நாங்க எப்பவுமே உஷார்தான்.. வேளச்சேரி பாலத்தில் கார்களை பார்க்கிங் செய்த உரிமையாளர்கள் ; வீடியோ!

அதே போல நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

நாளை திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் டஅதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பருவமழை இயல்பை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

The station இயல்பை விட பருவமழை வெளுத்து வாங்கும்.. பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article