ARTICLE AD BOX
சேலத்தில் பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, செந்தில் பாலாஜியின் செய்தியை திசை திருப்ப திமுக அரசு என்னை சிறையில் அடைத்தது, மாநில செயலாளர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட 11 பேர் என்னுடன் சிறையில் அடைத்தனர்.
உயர்நீதிமன்றத்தை அணுகி 11 நாட்களுக்கு ஜாமீன் பெற்றோம். வழக்கில் ஆலயத்தின் பூட்டு உடைக்கப்பட்டதாகவும், அதன் சேத மதிப்பு ரூ.600 எனவும் கூறி வழக்கு தொடுத்தார்கள். என் ஒருவனை சிறையில் அடைக்க ரூ.600 சேதம் எனக் கூறி, ரூ.30 லட்சம் செலவு செய்தது திமுக அரசு, ஆனால், அரசு சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என நிருபித்து, தன்னை வழக்கில் நீதிபதி விடுவித்துள்ளார்.
இதையும் படியுங்க: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்த தடையில்லை : அதிரடி தீர்ப்பு!
இந்த காலகட்டத்தில 36 முறை வாய்தா வாங்கப்பட்டது. பாரத மாதா சிலை என்பது தேசத்தின் கடவுள் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆனால், பாரத மாதா நினைவாலயம் என திமுக அரசு கூறி வருகிறது. இனியாவது இந்த அரசு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பாரத மாதா ஆலயம் என எழுதப்பட வேண்டும். இல்லையெனில், நாங்கள் வழக்கு தொடுப்போம். பாரத மாதா ஆலயம் எழுப்பவே, 6 ஏக்கர் நிலத்தை சுப்பிரமணிய சிவா வாங்கினார்.

அதன்படி, அதனை ஆலயமாக்க இந்த அரசு முன்வர வேண்டும். பாரத மாதாவுக்கு ஜெ. என்ற முழக்கம் புனித ஜார்ஜ் கோட்டையில் ஒலிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. தேசம் காப்போம், தமிழகம் வெல்வோம் மாநாடு வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று கூறினார்.

கூட்டணி குறித்து பேச தகுதி உடையவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. கூட்டணி குறித்து பேச எங்களுக்கு அனுமதியில்லை. தோல்வி பயத்தில், இலவசம் என்ற மத்தாப்புகளை ஆளும் கட்சி அள்ளி வீசுகிறது. சபாநாயகர் நாற்காலிக்கு ஒரு தகுதி உண்டு. ஆனால், தற்போது அருகதையற்ற ஒருவர் அதில் அமர்ந்துள்ளதாக கூறினார்.
இரட்டை இலைக்கு மேல் தாமரை மலரும், இரட்டை இலை கீழே தாமரை மேல தான் உள்ளது. இலைக்கு மேலேதான் பூ மலரும் என்பதால்தான் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும் என்று நயினார் நாகேந்திரன் சொன்னார் என விளக்கம் அளித்தார்.
