ARTICLE AD BOX
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி.
இவரது மனைவி சினேகா இவர்களுக்கு தர்ஷிகா ஸ்ரீ என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளார். அந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் தர்ஷிகா உட்பட 13 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: சிறுமிகளிடம் சீண்டலில் ஈடுபட்ட மதபோதகரின் உறவினரும் கைது.. அடுத்தடுத்து சிக்கும் தடயம்!
இங்கு பாப்பாத்தி என்பவர் ஆசிரியராகவும் சுராக்காய்பட்டியை சேர்ந்த (ஆயா) செல்லம்மாள் ஆயாவாகாவும் வேலை பார்த்து வருகின்றனர். தினந்தோறும் தனது அம்மா சினேகாவுடன் பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்புவது வழக்கமாக கொண்டனர்.
இந்நிலையில் செவ்வாயன்று அங்கன்வாடி சென்று திரும்பிய தர்ஷிகா ஸ்ரீ சோகமாக காணப்பட்டதால் பெற்றோர் என்ன என்று விசாரித்ததில் ஆயாம்மா கழுத்தில் கரண்டியால் சூடு வைத்ததாக கூறியதையடுத்து பெற்றோர்கள் ஆயாம்மாவிடம் கேட்டதற்கு அப்படித்தான் வைப்பேன் என்று கூறியதால் கன்னிவாடி போலீசில் புகார் அளித்தார்.
குழந்தைக்கு சூடு வைத்தது மட்டுமல்லாமல், அப்படித்தான் வைப்பேன் என திமிராக பேசிய ஆயம்மாக செல்லம்மாவிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

6 months ago
65









English (US) ·