ARTICLE AD BOX
சினிமா பிரபலங்கள் வீட்டில் விசேஷம் என்றாலே மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் இருக்கும். அந்தளவுக்கு பாப்புலரான மாதம்பட்டி ரங்கராஜ் தனியாக கேட்டரிங் தொழில் செய்து வருகிறார்
கோவையை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், விஜய் டிவியில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அதற்கு முன் மெகந்தி சர்க்கஸ், பெண்குயின் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படியுங்க : தனுஷ் பெயரை தவிர்த்த டிராகன் இயக்குநர்.. பிரதீப் சொன்னதும் இதுதான்!
இந்த நிலையில் மனைவி ஸ்ருதியுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் ரங்கராஜ் பிரிவதாகவும், சினிமா பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா உடன் 2வது திருமணம் என பேச்சுகள் எழுந்தன.
அதற்கேற்றவாறு இருவரும் சேர்ந்துள்ள புகைப்படம் ஒன்று தீயாய் பரவியது. அவருக்கு அந்த நடிகையுடன் நெருக்கமான உறவு உள்ளது என செய்திகள் வெளியானது. இதையடுத்து ஸ்ருதி இன்ஸ்டாகிராமில் நான் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி என பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் சூடுபிடிக்க, மாதம்பட்டி ரங்கராஜ் இந்த விஷயம் குறித்து பேசியுள்ளார். என்னோட வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
தனிப்பட்ட விஷயம் குறித்து நான் ஏன் வெளியில் சொல்ல வேண்டும். ஒரு வேளை சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தால் அந்த நிலை வந்தால், நான் அனைத்தையும் தெளிவாக சொல்கிறேன் என கூறியுள்ளார்.