ARTICLE AD BOX
இரண்டாவது திருமணம்
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் முடித்துள்ளதுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமானவர். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில்தான் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவை நேற்றைய முன் தினம் திருமணம் செய்துகொண்டார். இருவரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ளார். அதுவும் ஜாய் கிரிஸில்டா 6 மாதம் கர்ப்பமாகவும் இருக்கிறார். இச்செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியான ஸ்ருதியை இன்னும் விவாகரத்து செய்யவில்லை எனவும் ஒரு சாரார் கூறி வருகின்றனர்.
களத்தில் இறங்கும் முதல் மனைவி!
இந்த நிலையில் தன்னை விவாகரத்து செய்துகொள்ளாமலே மறுமணம் செய்துகொண்டதால் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவரது முதல் மனைவி ஸ்ருதி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் முதல் மனைவியான ஸ்ருதி ஒரு வழக்கறிஞர் என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை விவாகரத்து செய்துகொள்ளாமல் மாதம்பட்டி ரங்கராஜ் மறுமணம் செய்திருந்தால் அவரை கைது செய்யவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
