இரண்டு பேருந்துகளுக்கு நடுவில் நசுங்கிய ஆட்டோ! சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி சம்பவம்… 

2 months ago 34
ARTICLE AD BOX

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரமான சித்ரதுர்காவில் இரண்டு பேருந்துகளுக்கு நடுவில் ஆட்டோ ஒன்று நசுங்கிய காட்சி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஒரு பேருந்து அதன் முன்னே சென்றுகொண்டிருந்த ஆட்டோவிற்கு பின்னால் வந்து வேகமாக மோதி தள்ள, அந்த ஆட்டோ முன்னால் உள்ள ஒரு பேருந்தின் பின்புறத்தில் மோதி நசுங்கியது. 

Cctv footage of autorickshaw sandwiched between two buses

அந்த ஆட்டோவில் டிரைவருடன் சில பயணிகளும் இருந்தனர். இச்சம்பவம் நடந்த மறு வினாடியே அங்கிருந்த மக்கள் பதறியடித்து ஆட்டோவில் உள்ளவர்களை காப்பாற்ற ஓடினார்கள். அந்த வகையில் டிரைவர் உட்பட ஆட்டோவில் பயணித்த பயணிகள் என மொத்தம் 4 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர். 

Location: Chitradurga

Sandwich crash 😔

In stop and go traffic,when people get distracted,there's a high chance for such events.pic.twitter.com/ft3L60RLhw

— DriveSmart🛡️ (@DriveSmart_IN) August 5, 2025

அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர்கள் அனைவரின் உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்லை எனவும் அவர்கள் மரணத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்தார்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சிசிடிவி வீடியோ பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

  • Actress sangeetha and singer krish divorce இன்ஸ்டா  பெயரில் மாற்றம்? கிரிஷிடம் இருந்து விவாகரத்து பெற்ற சங்கீதா? என்னப்பா சொல்றீங்க!
  • Continue Reading

    Read Entire Article