ARTICLE AD BOX
விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்
“கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த் அதனை தொடர்ந்து “துருவங்கள் பதினாறு”, “இருட்டு அறையில் முரட்டுக் குத்து” போன்ற பல திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டார். சமீபத்தில் கூட “டெவில்ஸ் டபுள்” திரைப்படத்தில் நடித்திருந்தார் யாஷிகா ஆனந்த்.
இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு யாஷிகா ஆனந்தின் கார் சென்னை மகாபலிபுரம் சாலையில் விபத்துக்குள்ளானது. பலத்த காயமடைந்த யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். அதன் பின் தீவிர சிகிச்சை பெற்று மீண்டார். அந்த விபத்தில் அவருடன் காரில் இருந்த அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் நடந்து 4 வருடங்கள் முடிவடைந்த நிலையில் யாஷிகா ஆனந்த் தனது தோழியுடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.

நீ இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை…
“நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் நீ இல்லாத வெறுமை இன்னும் நீடிக்கிறது. நீ இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஒவ்வொரு நாளும் நான் போராடுகிறேன். காலம் அனைத்தையும் குணப்படுத்தும் என கூறுவார்கள், ஆனால் உன்னை இழந்த வலி இன்னும் குறையவில்லை.
நான் நினைவுகளின் சுழலில் சிக்கிக்கொண்டிருக்கிறேன். நாம் பகிர்ந்துகொண்ட தருணங்களை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன். நீ இப்போது என்னுடன் இருந்தால் என்ன சொல்வாய், என்ன செய்வாய் என்பதை என்னால் கற்பனை செய்து மட்டுமே பார்க்க முடியும் என்பது ஒரு கொடூரமான விஷயமாக இருக்கிறது.

பாவ், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு நான் உன்னை நேசிக்கிறேன். என் வருத்தத்தின் பாரம் என்னை நசுக்குகிறது. முடிந்தால் காலத்தை திருப்பி, அந்த விபத்து நடக்காதபடி எல்லாவற்றையும் மாற்ற விரும்புகிறேன். இப்போது எனக்கு இருப்பது, உந்தன் நினைவுகளும் உன்னை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற விருப்பமும் மட்டுமே. உன் ஆத்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன். எப்படியாவது நாம் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையை பிடித்து கொள்கிறேன். பவ், என் இதயம் இன்னும் உன் இருப்புடன் எதிரொலிக்கிறது. அதுவரை நான் உன் நினைவுகளுடன் இருக்கிறேன். Love you 3000” என்று தனது தோழி குறித்தான நினைவுகளையும் துயரத்தையும் யாஷிகா ஆனந்த் பகிர்ந்துகொண்டுள்ளார்.
