இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

2 weeks ago 20
ARTICLE AD BOX

சூர்யாவின் ரெட்ரோ

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் இத்திரைப்படத்தில் உருவான “கனிமா” பாடல் ரசிகர்களின் மத்தியில் டிரெண்டிங்கான பாடலாக வலம் வருகிறது. 

srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi

இத்திரைப்படம் ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக இத்திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது தெரியவருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் பிரபல மூத்த சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி. 

இலங்கை தமிழர்களை…

அதாவது இத்திரைப்படத்தில் இலங்கை தமிழர்களை நெகட்டிவாக சித்தரித்துள்ளதாக ஒரு தகவல் வருகிறதாம். “இந்த தகவலை நான் வெறும் வதந்தி என்று ஒதுக்கிவிடமுடியாது. ஏனெறால் இதற்கு முன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இலங்கை தமிழர்களை ரவுடிகள் போல் காட்சிப்படுத்தியிருப்பார். எனினும் இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை” என்றும் பிஸ்மி தனது வீடியோவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!
  • Continue Reading

    Read Entire Article