ARTICLE AD BOX
சர்ச்சையில் சிக்கிய கிங்டம்?
விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி வெளியான “கிங்டம்” திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸே நடித்துள்ளார். கௌதம் தின்னனூரி என்பவர் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இலங்கை தமிழர்களை கொடியவர்களாக சித்தரித்துள்ளதாகவும் இத்திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு தமிழ் கடவுளான முருகனின் பெயர் வைத்துள்ளதாக சர்ச்சைகள் கிளம்பின. இது குறித்து சீமான் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
 போராட்டத்தில் குதித்த நாம் தமிழர்
இந்த நிலையில் “கிங்டம்” திரைப்படத்தை தமிழ்நாட்டில் எந்த திரையரங்கத்திலும் திரையிடக்கூடாது எனவும் இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இராமநாதபுரத்தில் “கிங்டம்” திரைப்படம் திரையிடப்பட்டு வரும் ஒரு திரையரங்கத்தை இன்று நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனால் போலீஸாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
                        2 months ago
                                33
                    








                        English (US)  ·