ARTICLE AD BOX
கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.
தெலுங்கானா கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது உறவினர் ஒருவருடன் கொண்டாபேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
இதையும் படியுங்க: நித்தியானந்தா இறந்து 2 நாட்கள் ஆச்சு.. பகீர் கிளப்பிய வீடியோ : APRIL FOOL செய்கிறதா கைலாசா?
தரிசனம் முடிந்ததும் பஜனையில் பங்கேற்றனர். இரவு 11.30 மணியளவில் இளம்பெண் கோவில் அருகே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.ஆனால் அது பூட்டப்பட்டிருந்ததால், தனது உறவினருடன் அருகில் உள்ள மலை பகுதிக்கு சென்றனர்.

அங்கு கோவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய ஒருவர் தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவல் அளிக்க, உடனே வந்த 6 பேர் கொண்ட கும்பல் உறவினரை கட்டிப் போட்டு இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
விடிய விடிய மது அருந்தி இளம்பெண்ணை நாசம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றதும், உறவினரும், இளம்பெண்ணும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து 7 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
