ARTICLE AD BOX
புதுச்சேரியைச் சேர்ந்தவர் இளையரசன். இவர் ஃபிங்கர் என்ற உடனடி கடன் செயலியை பதிவிறக்கம் செய்து கடன் 6 லட்ச ரூபாய் பெற்றுள்ளார்.
கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து உரிய தேதிக்கு முன்பே திருப்பிச் செலுத்தியுள்ளார். இருப்பினும் பணம் செலுத்திய பிறகும், அடையாளம் தெரியாத நபர் வங்கதேச எண்ணுள்ள நம்பரில் இருந்து வாட்ஸ்அப் மூலம் இளையரசனை தொடர்புகொண்டு, உரிய தொகையை செலுத்துமாறு கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!
ஆனால் இளையரசன் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். இதையடுத்து அந்த அடையாளம் தெரியாத நபர் இளையரசனின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பி, பணத்தை செலுத்துமாறு மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன இளையரசன் ரூ.63,089 வரை பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார். இருப்பினும், அந்த நபர் மிரட்டி தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த இளையரசன் புதுச்சேரி ஃசைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அசிமுதீன் என்பவர் தனது வங்கிக் கணக்குச் சான்றுகளை, தன்னுடைய நண்பரான சென்னையை சேர்ந்த சதாம் அன்சாரி(34) என்பவருக்கு வழங்கியுள்ளார் என்பதும், அதனை பயன்படுத்தி அவர் இந்த மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதும், பெரிய வந்தது.
மேலும் இந்த மோசடியில் முக்கிய புள்ளியாக துபாயில் இருப்பவர்கள் செயல்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சதாம் அன்சாரியை கைது செய்த போலீஸார் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வெளிநாட்டில் வசித்து வரும் மோசடி நபர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.