ARTICLE AD BOX
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது.
இதையும் படியுங்க: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 49 வயது கூலித்தொழிலாளியின் கோரமுகம்!!
அறுந்து கிடந்த மின் கம்பியை சீரமைத்து தருமாறு மணமேல்குடி மின்வாரியத்தை பலமுறை புகார் அளித்த நிலையில் அவர்கள் அலட்சியம் காட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த பிஸ்மிகான் (23) என்ற இளைஞர் அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்த நிலையில் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

மின்வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டிய அம்மா பட்டினம் பகுதியைச் சேர்ந்த மக்கள் ராமேஸ்வரம் பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து தற்பொழுது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
