ARTICLE AD BOX
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றிய காவலர் அஜித் குமார், 10 பவுன் நகை திருடு போன வழக்கில் காவல்துறையின் விசாரணையின் போது உயிரிழந்தாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: மீண்டும் வேங்கைவயல் சம்பவமா? மேல்நிலை தொட்டியில் இறங்கி மலம் கழித்த மர்மநபர்கள்!!
இச்சம்பவம் தொடர்பாக திருப்புவனம் குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆறு பேர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் போலீசார், இளைஞர் அஜித்தை அடித்து தாக்கிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் உயிரிழந்ததாக FIR-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கும் வீடியோ வெளியானது#Trending | #AjithkumarMysteryDeath | #ajithkumarcase | #TNPoliceBrutality | #TNGovt | #justiseforajithkumar | #viralvideo |… pic.twitter.com/vnWP1NPEdx
— UpdateNews360Tamil (@updatenewstamil) July 1, 2025இது தொடர்பான வீடியோ நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது. இந்த வீடியோவை எடுத்த சக்தீஸ்வரன் என்பவரை கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

4 months ago
62









English (US) ·