ARTICLE AD BOX
இழப்பீடு கேட்டு நோட்டீஸ்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ் சினிமாவின் கிளாசிக் பாடல்கள் பல பின்னணியில் ஒலித்தன. அதில் இளையராஜா இசையமைத்த “ஒத்த ரூபா தாரேன்”, “என் ஜோடி மஞ்சக்குருவி”, “இளமை இதோ இதோ” ஆகிய பாடல்களும் இடம்பிடித்திருந்தன.
இந்த நிலையில்தான் தன்னுடைய பாடல்களை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இளையராஜா ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இச்செய்தியால் இளையராஜாவை அஜித் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
அதனை தொடர்ந்து இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், ஒரு விழாவில் பேசியபோது, “எனது அண்ணனின் பாடலுக்குதானே கைத்தட்டுகிறார்கள். அப்படி என்றால் அவருக்குரிய உரிமையை கேட்பதில் என்ன தவறு?” என்று கேட்டிருந்தார்.
இளையராஜா செஞ்சது சரியா?
இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த கெத்து தினேஷ், “இசையமைப்பாளரை நாம் எப்போதும் கௌரவிக்க வேண்டும். ராஜா சார் கேட்பது தார்மீகமான தர்மமான ஒரு விஷயம்தான். அவர் கேட்காமலே நாம் தரவேண்டும். அவர் கேட்கிற மாதிரி நாம் வைத்துக்கொள்ளக்கூடாது” என கூறினார். கெத்து தினேஷ் இவ்வாறு பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

6 months ago
68









English (US) ·