ARTICLE AD BOX
வனிதா மீது வழக்கு?
வனிதா விஜயகுமார் நடித்து இயக்கிய “மிஸஸ் & மிஸ்டர்” திரைப்படத்தில் “மைக்கேல் மதன காமராஜன்” படத்தில் இடம்பெற்ற சிவராத்திரி என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இப்பாடல் இளையராஜா இசையமைத்த பாடலாகும். அந்த வகையில் இப்பாடலை தனது அனுமதி இல்லாமல் பயபடுத்தியுள்ளதாக இளையராஜா வழக்கு தொடர்ந்தார். மேலும் அப்பாடலை நீக்குமாறும் முறையிட்டிருந்தார். இந்த நிலையில் இது குறித்து வனிதா விஜயகுமாரிடம் கேள்வி எழுப்பியபோது, “இளையராஜாவை நேரில் சந்தித்து அனுமதி வாங்கிய பிறகுதான் அப்பாடலை பயன்படுத்தினோம். அப்படி இருக்க ஏன் வழக்கு போடவேண்டும்?” என கேள்வி எழுப்பினார். அதன் பின் அவர், “நான் இளையராஜா வீட்டிற்கு மருமகளாக செல்ல வேண்டியவள்” என கூறியது பரபரப்பை கிளப்பியது.

வனிதா இவ்வாறு பேசியதை தொடர்ந்து “கார்த்திக் ராஜாவும் வனிதாவும் காதலித்தார்களா?” போன்ற பேச்சுக்கள் கிளம்பின. இதனை தொடர்ந்து சமீபத்தில் பேட்டியளித்த வனிதா, “அந்த குடும்பத்தில் ஒரு விஷயம் நடந்தது. அப்போது அந்த பையன் என்னை கேட்டான். நீ என்னை லவ் பண்றியா இல்லை என் அப்பாவை லவ் பண்றியா? என்று. நான் உங்க அப்பாவைதான் லவ் பண்றேன் என்று சொன்னேன்” என கூறினார். இது நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இளையராஜாவையா வனிதா காதலித்தார்? என்றேல்லாம் பேசத் தொடங்கிவிட்டனர்.
வனிதா சொல்றது எல்லாம் ப்ரூடா!
இந்த நிலையில் வனிதா விஜயகுமாரின் இப்பேட்டி குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், “வனிதா விஜயகுமார் எப்போதுமே நிறைய பொய்களை பேசுவார். அவரது குடும்ப விஷயங்களிலும் பொய்களை பல அவிழ்த்துவிடுவார். திருமண விஷயங்களிலும் பொய்களை அவிழ்த்துவிடுவார். அப்பொய்களை பற்றி பேசுவதற்கு தனி எபிசோடே வேண்டும்.
இளையராஜாவிடம் அனுமதி வாங்கியதற்கு ஆதாரம் இருக்கிறதா? அந்த பாடலின் காப்பிரைட்டை வைத்திருக்கும் சோனி மியூசிக் கையெழுத்திட்ட ஒப்பந்தம் இருக்கிறதா? எதுவும் அவர் காட்டவில்லை. அதுமட்டுமல்லாது சோனி மியூசிக்கிற்கும் இளையராஜாவிற்கும் இடையே வழக்கு போய்க்கொண்டிருக்கிறது.

எனது சினிமா அனுபவத்தில் இதுவரை இளையராஜா வனிதாவை மருமகளே என்று அழைத்து நான் கேள்விப்பட்டதே இல்லை. இது புது ப்ரூடாவாக இருக்கிறது. எந்த காதலனாவது என்னை லவ் பண்றியா அல்லது எனது அப்பாவை லவ் பண்றியா என கேட்பானா? இது எவ்வளவு பெரிய அருவருப்பான வார்த்தை தெரியுமா? இளையராஜா தன் மீது வழக்கு போட்டதனால் அந்த கோபத்தில் வனிதா இப்படி பேசுகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்” என கூறினார். இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
