ARTICLE AD BOX
பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவரான அன்புமணி தற்போது அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு கும்முடிபூண்டி பகுதியில் மக்களிடம் உரையாற்றினார் அன்புமணி.
உரிமை மீட்பு குறித்து மக்களிடம் அவர் உரையாற்றிக்கொண்டிருந்த சமயத்தில் பாமக தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது திடீரென கடுப்பான அன்புமணி, “இதெல்லாம் எதுக்குடா வச்சிருக்காங்க” என கோபத்தில் பேசினார்.

அதனை தொடர்ந்து வெகுநேரம் பட்டாசு வெடித்த நிலையில், “பொன்னான நேரத்தை வீணாக்குகிறீர்கள். இந்த நிலைமையில்தான் இருக்கிறது. இவனுக்கு எல்லாம் படிப்பறிவு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உரிமைகளை மீட்டெடுக்கணும், இந்த அளவுக்குதான் இருக்கு” என பேசியது அருகில் உள்ள பலரையும் சங்கடத்திற்குள்ளாக்கியது. இச்சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
