ARTICLE AD BOX
தனுஷின் குபேரா
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை சுனில் நரங், புஷ்குர் ராம் மோகன் ராவ், அஜய் கைகாலா ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

முதல் விமர்சனம்
எப்போதும் பெரிய ஹீரோ திரைப்படங்கள் வெளியாகவுள்ளது என்றால் அத்திரைப்படங்கள் வெளியாவதற்கு ஐந்தாறு நாட்களுக்கு முன்பே அத்திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களை பதிவிட்டுவிடுவார் உமைர் சந்து. கடந்த ஜூன் 5 ஆம் தேதி கமல்ஹாசனின் “தக் லைஃப்” திரைப்படம் வெளியானது. ஆனால் அத்திரைப்படம் வெளியாவதற்கு 4 நாட்களுக்கு முன்பே “தக் லைஃப்” திரைப்படம் அபாரமாக இருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இவர் ஒரு Fake Reviewer என்று பலரும் விமர்சித்தனர். படத்தை பார்க்காமலே விமர்சனம் செய்வார் என்று இவரை குறித்து பலரும் கருத்து தெரிவித்தனர். எனினும் இவர் புகழ்ந்த “தக் லைஃப்” திரைப்படம் படுதோல்வியடைந்தது. இவரது எக்ஸ் தளப் பதிவில் “நரி ஊளையிட்டிருச்சு, சக்சஸ்” என்பது போன்ற கம்மெண்ட்டுகளால் ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்திருந்தனர்.
அந்த வகையில் உமைர் சந்து தற்போது “குபேரா” திரைப்படத்தை குறித்து புகழ்ந்து கூறியுள்ளார். அதாவது “குபேரா” திரைப்படம் ஒரு பவர்ஃபுல் கிரைம் திரில்லர் திரைப்படம் எனவும் நாகர்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா ஆகியோர் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள், படத்தின் கதை அருமையாக இருப்பதாகவும் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார். இவரது டிவிட் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும், இவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
— Umair Sandhu (@UmairSandu) June 17, 2025