ARTICLE AD BOX
டாப் தொகுப்பாளினி
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கும் மேலாக தமிழ் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளினியாக வலம் வருபவர் இவர்.

இவரது கணீர் குரல்தான் இவருக்கு பலமே. தொகுப்பாளினியாக மட்டுமல்லாது “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியிலும் “குக் வித் கோமாளி சீசன் 5” நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கற்றார். இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் ரன்னர் அப் ஆக வந்தார். “குக் வித் கோமாளி சீசன் 5” நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் ஆனார்.
இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2020 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இரண்டாவது திருமணம்

இந்த நிலையில் திடீரென பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. விஜே வசி என்பவரை நேற்று கரம் பிடித்துள்ளார் பிரியங்கா. இவரது திருமண வைபோக புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆன நிலையில் மாப்பிள்ளை வயதானவர் போல் தென்படுகிறார் என்று பேச்சுக்கள் கிளம்பின. இந்த நிலையில் விஜே வசியின் வயது குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பிரியங்காவுக்கு 34 வயது ஆகும் நிலையில் வசிக்கு 42 வயது என கூறப்படுகிறது.