ARTICLE AD BOX
மூன்றாவது திருமணம்!
இளையராஜாவின் மகனான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா 90’ஸ் கிட்களின் மிகவும் ஃபேவரைட் இசையமைப்பாளர் ஆவார். 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் வேற லெவல் ஆல்பம்களை கொடுத்து ரசிகர்களை பித்தேற்றிய யுவன் ஷங்கர் ராஜா, 2005 ஆம் ஆண்டு சுஜயா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக 2008 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

அதன் பின் 2011 ஆம் ஆண்டு ஷில்பா என்பவரை யுவன் திருமணம் செய்துகொண்டார். ஆனால் 2014 ஆம் ஆண்டு இந்த தம்பதியும் விவாகரத்து பெற்றது. இதனை தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறினார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜஃப்ரூன் நிசார் என்ற இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சபிதா ஜோசஃப் யுவனின் திருமணத்திற்கு இளையராஜா முறைத்துக்கொண்டதாக ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
சமாதானம் செய்த பவதாரிணி!
யுவன் இஸ்லாமியராக மாறிய பின் ஒரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் முடித்தபோது இளையராஜா முறைத்துக்கொண்டாராம். எனினும் யுவனின் சகோதரி பவதாரிணிதான் இளையாராஜாவிடம் “யுவனுக்கு இந்த திருமணமாவது சந்தோஷத்தை கொடுக்கட்டும்” என கூறி அவரை சமாதானப்படுத்தினாராம்.

யுவன் ஷங்கர் ராஜாவை மகிழ்ச்சியோடு வாழ்த்துங்கள் என கூறினாராம். இதன் பிறகுதான் இளையராஜா சமாதானம் ஆனாராம். இவ்வாறு சபிதா ஜோசஃப் அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
