இஸ்லாமை பின்பற்றும் ஒருவர்.. சபரிமலையில் நின்ற நடிகர்.. வெடித்த மத கருத்துகள்!

1 month ago 53
ARTICLE AD BOX

இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மோகன்லால் சபரிமலையில் சிறப்பு வழிபாடு செய்தது குறித்து கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்: மோலிவுட் எனப்படும் மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டார்களாக வலம் வருபவர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால். இதனிடையே, உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், கடந்த மார்ச் 18ஆம் தேதி மோகன்லால் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அவர் நடிகர் மம்மூட்டிக்காக சிறப்பு வழிபாடு நடத்தியதாக சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தொடர்ந்து, மம்மூட்டி உடல்நிலை சரியில்லாததை தொடர்ந்து, மோகன்லால் சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. அதாவது, தேவசம் அலுவலகம் வெளியிட்ட ரசீது ஒன்று சோஷியம் மீடியாவில் வைரலானது. இந்த ரசீதாலும், வெளியான தகவலாலு மத ரீதியான கருத்துகள் வெளிவருகின்றன.

மேலும், இது குறித்து முன்னாள் பத்திரிகையாளர் ஓ.அப்துல்லா கூறுகையில், “மோகன்லாலை தனக்காக மம்மூட்டி பிரார்த்தனை செய்யச் சொல்லியிருந்தால், அவர் (மம்மூட்டி) மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனென்றால், இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Mohanlal in Sabrimala

அதேபோல், திரைப்படத் தயாரிப்பாளர் பிருத்விராஜ் சுகுமாரன் கூறுகையில், “மம்மூட்டி – மோகன்லால் ஆகிய இருவருமே இதுபோன்ற ஒன்றைச் செய்வது இது முதல் முறையல்ல. இருப்பினும், இந்த முறை, அது செய்திகளில் இடம் பிடித்து வெளியாகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இது தொடர்பாக மோகன்லால் கூறுகையில், “மம்மூட்டியுடன் 50க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்துள்ளேன். நாங்கள் ஒவ்வொரு வாரமும் சந்தித்துக் கொள்வோம். உண்மையிலேயே நாங்கள் நல்ல நண்பர்கள். பிரார்த்தனைகள் என்பவை தனிப்பட்டவை. மம்மூட்டிக்காக பிரார்த்தனை செய்வதில் எந்த தவறும் இல்லை.

இதையும் படிங்க: நீ மாசமா இருக்கியோ, நாசமா போவியோ : என் கூட ப***… மகனின் காதலியை தரக்குறைவாக பேசிய தந்தை!

அவருக்கு லேசான உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது பிரார்த்தனை செய்தேன். தற்போது அவர் நல்ல முறையில் குணமடைந்து வருகிறார். மம்மூட்டிக்கு, தான் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து தேவையின்றி சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரி தெரியப்படுத்தியிருக்கலாம்” எனக் கூறியிருந்தார்.

ஆனால், “நடிகர் மோகன்லால் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து தேவஸ்தான ஊழியர் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. வழிபாட்டு ரசீதை பெற்றுச் சென்ற நடிகரின் (மோகன்லால்) உதவியாளர் வெளியிட்ட தகவல் வைரலானது. இதற்கும், திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • Mohanlal in Sabrimala இஸ்லாமை பின்பற்றும் ஒருவர்.. சபரிமலையில் நின்ற நடிகர்.. வெடித்த மத கருத்துகள்!
  • Continue Reading

    Read Entire Article