ARTICLE AD BOX
காமெடி நடிகரான சந்தானம் தற்போது நடித்தால் ஹீரோதான் என்ற பாணயில் அண்மைக்காலமாக நடித்து வருகிறார். படம் ஒடுதோ இல்லையோ, வருடத்திற்கு 3 படமாவது ரிலீஸ் செய்து விடுகிறார்.
இதையும் படியுங்க: போதைக்காக ஒரே வருடத்தில் ரூ.70 லட்சம் செலவு… வசமாக சிக்கிய பெண் மருத்துவர்!!
சந்தானம் நடித்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் 2023-ல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரேம் ஆனந்த் இயக்கிய இப்படத்தின் அடுத்த பாகமாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ உருவாகியுள்ளது.
இதில் சந்தானத்துடன் செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார்.
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் கதை, சொகுசு கப்பலில் தொடங்கி ஒரு தீவில் நிகழ்வது போல அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் 16-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், பாஜக வழக்கறிஞர்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சந்தானம் மீது புகார் அளித்துள்ளனர். ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் பெருமாளை அவமதிக்கும் வகையில் பாடல் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் படத்திற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் புகாரில் கூறியுள்ளனர்.