ARTICLE AD BOX
விஜய் சேதுபதி மீது பாலியல் புகார்
ரம்யா மோகன் என்ற பயனர் தனது எக்ஸ் தளத்தில் விஜய் சேதுபதி தனக்கு தெரிந்த ஒரு பெண்ணை பல ஆண்டுகளாக சுரண்டலுக்குள்ளாக்கி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். அப்பதிவில், “போதை பொருள் மற்றும் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் ஒரு ஜோக் அல்ல. எனக்கு தெரிந்த பெண் ஒருவர் அவள் ஒருபோதும் விரும்பாத ஒரு உலகத்திற்குள் இழுக்கப்பட்டாள்.
விஜய் சேதுபதி கேரவனுக்கு செல்ல ரூ.2 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் சமூக வலைத்தளத்தில் புனிதர் போல் நடித்து வருகிறார். அவர் அவளை பல வருடங்களாக பயன்படுத்தியுள்ளார். இது போன்று பல உள்ளன” என குறிப்பிட்டிருந்தார்.
இப்பதிவு இணையத்தில் வைரல் ஆன நிலையில் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். எனினும் சில மணி நேரங்களில் அப்பதிவு நீக்கப்பட்டது. இந்த நிலையில் விஜய் சேதுபதி தன் மீதான பாலியல் புகார் குறித்து ஒரு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

உங்க பாச்சா பலிக்காது!
சமீபத்தில் ஒரு பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “என்னை பற்றி தெரிந்தவர்கள் இந்த மோசமான குற்றச்சாட்டை கேட்டு சிரிப்பார்கள். இது போன்ற குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்காது. ஆனால் என் நண்பர்களும் குடும்பத்தினரும் இது குறித்து கவலையடைந்துள்ளனர். அவர்களிடம், ‘கவனத்தை ஈர்ப்பதற்காகவே அப்பெண் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார். சில நிமிட புகழ் கிடைக்கும் அப்பெண்ணுக்கு. அதனை சந்தோஷமாக அனுபவிக்கட்டும்’ என கூறினேன்” என்று பேசியுள்ளார் .
மேலும் பேசிய அவர், “இந்த குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்ள தனது வழக்கறிஞர் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கவுள்ளார். இது போன்ற பல அவதூறுகளை நான் சந்தித்துள்ளேன். தனது புதிய திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த குற்றச்சாட்டை வைத்திருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
என்னை பற்றி அவதூறு பரப்புவதன் மூலம் படத்தை நாசம் செய்துவிடலாம் என நினைக்கின்றனர். ஆனால் அது நடக்காது. தற்போது எல்லாம் சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்திருந்தாலே போதும், யார் வேண்டுமானாலும் யாரை பற்றி வேண்டுமானாலும் எதுவும் சொல்லலாம்” என விஜய் சேதுபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
.
 
                        3 months ago
                                32
                    








                        English (US)  ·