ARTICLE AD BOX
ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் விசாரணை தொய்வாக இருப்பதாகவும், விசாரண அதிகாரியை மாற்ற வேண்டும் என கோவை ஐஜி அலுவலகத்தில் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை பரபரப்பு மனு கொடுத்துள்ளார்.
பின்னர் பேசிய அண்ணாதுரை எனக்கு சரியான செக்சன் போட்டு வழக்கு தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை குறித்து மனு கொடுத்துள்ளேன்.
எவ்வளவு சீக்கிரமாக செய்ய முடியுமோ செய்கிறேன் எனக் காவல்துறையினர் கூறியுள்ளார். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் லேப் ரிப்போர்ட் மற்றும் ஆடியோ ரிப்போர்ட் வரவில்லை.
இது காலதாமதம் ஆகும் ரிசல்ட் வந்தவுடன் சம்பந்தப்பட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வழக்கு தொய்வாக போகிறது. விசாரணை அதிகாரி மீது சந்தேகம் வருகிறது.
தனி விசாரணை அதிகாரி வேண்டும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோளும் எடுத்துள்ளோம். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கொடுக்கும் பொழுது எங்களுக்கு வாக்குறுதி கொடுத்த பின்பு தான் உடலை அடக்கம் செய்தோம்.
மூன்று பேரை கைது செய்வோம் என தெரிவித்தார். அடுத்த நாள் இருவர் மட்டுமே கைது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஜாமின் வந்துள்ளார். 29ஆம் தேதி தமிழ்நாடு அனைத்தும் உள்ள தொலைக்காட்சிகளில் ஆடியோ வெளியானது.
பைண்டிங் ஆர்டர் என அதிகாரத்தை பயன்படுத்தி ஜாமினில் விடவேண்டிய அவசியம் என்ன? லேப் ரிப்போட், ஆடியோ ரிப்போர்ட் வந்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
கூடுதல் ஆவணங்கள் அவர்களே திரட்டி உள்ளனர்.நகை இன்னும் எங்களுக்கு தரவில்லை. ஆதாரங்கள் திரட்டி விட்டு நீதிமன்றம் மூலமாக எங்களுக்கு தருவார்கள்.
ரிதன்யா தற்கொலை வழக்கில் இதுபோன்ற இந்தியாவில் எங்கும் நடக்கக்கூடாது பொதுமக்களுக்கும் போய் சேர்ந்ததற்கு தைரியத்தை கொடுத்ததற்கு ஊடகத்திற்கு நன்றி.
அதேபோல பெண்ணை இழந்து விட்டு வருத்தத்தில் உள்ளேன். நான் பேச்சாளர் இல்லை என்னுடைய உணர்வுகளை பிரதிபலித்தேன். 27 வருடம் காப்பாற்றிய பெண்ணை சமூக வலைதளங்களில் நண்பர்கள் தவறாக சித்தரித்து இழந்ததை விட மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது.
உங்கள் வீட்டில் குடும்பம் தங்கச்சியாக இருந்தால் இப்படி சமூக வலைதளங்களில் போடுவீர்களா? சரியான தகவலை போடுங்கள் என வருத்தத்துடன் தெரிவித்தார்.