ARTICLE AD BOX
சமீபத்தில் தமிழக முதல்வரால் உங்களுடன் ஸ்டாலின் என்கிற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அந்தந்த ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் என்கிற முகாம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் கீழக்காவாகுக்குடி ஊராட்சியில் சேந்தமங்கலம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் என்கிற முகாம் நடைபெற்றது.இதில் பல்வேறு துறை சார்த கோரிக்கைகள் மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனுக்கள் பெறப்பட்ட இடத்தில் எத்தனை மனுக்கள் பெறப்பட்டது என்று ஊழியரிடம் கேட்டபோது அவர் குறைவாக கூறியதால் ஏரியாவில் சொன்னீர்களா ஒரு நாளைக்கு 30 மனுவாவது வாங்க வேண்டும் என்று கூறி இருக்கிறேன்.

சாயந்தரத்துக்குள் முப்பது மணு வாங்க வேண்டும்.சும்மா வந்து உட்கார்ந்துட்டு போவதற்காக என அங்கிருந்த ஊழியரிடம் கோபத்துடன் கடிந்து கொண்டார்.
மேலும் அவர் வேளாண் துறை சார்பில் பயனாளிகளுக்கு இடு பொருட்களையும் மனு கொடுத்தவுடன் தீர்வு காணப்பட்ட மின் இணைப்பு சாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இந்த நிகழ்ச்சியில் வழங்கினர்.

வேளாண் துறை காவல் துறை வருவாய்துறை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சமூக நலத்துறை மாற்றுத்திறனாளிகள் துறை என 15 துறைகளுக்கு கீழ் மனுக்கள் அங்கு பெறப்பட்டன.குறிப்பாக மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் அதிக அளவில் பெறப்பட்டன
