ARTICLE AD BOX
அமெரிக்க அதிபர் கொண்டு வந்த Big Beautiful Bill என்ற வரிக்குறைவு மசோதாவுக்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வரி சட்டத்தால் ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்களை வழங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியும் என்பதால் எலான் மஸ்க் கடுமையாக எதிர்த்து வருகிறார்.
இதனால் இவர்களது நட்பு உடைந்துள்ளது. என்னால் தான் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றார் என எலான் மஸ்க் கூறியுள்ளார். மேலும் அரசு செயல்திறன் துறை தலைவர் பதவியை துறந்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் 80% நடுத்தர மக்களின் பிரதிநிதியாக புதிய கட்சியை உருவாக்க நேரம் வந்துவிட்டதா? என எலான் மஸ்க் வாக்கெடுப்பை நடத்தியுள்ளார்.
இதன்மூலம் எலான் மஸ்க் புதிய கட்சியை தொடங்க உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. டிரம்பை எதிர்த்து உலக பணக்காரரான எலான் மஸ்க் ஜெயிப்பாரா என்ற கேள்வியும் கேட்கப்பட்டு வருகிறது.
தொழிலதிபர்கள், பெரும்புள்ளிகள் தொடர்புடைய சிறுமி பாலியல் துஷ்பிரயோக நெட்வோர்க் தொடர்பான எப்ஸ்ட்டீன் கோப்புகள் எனப்படும் வழக்கில் டிரம்பும் உள்ளார் என எலான் மஸ்க் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
ஏற்கனவே டிரம்ப் மீது பல பாலியல் வழக்குகள் உள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டு அதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் இருவரின் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

4 months ago
58









English (US) ·