ARTICLE AD BOX
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நடைபெற்ற நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் நாசர் வருகை தந்தார்.
அவரை வரவேற்ற திருத்தணி நகர திமுக நிர்வாகிகள் நகர செயலாளர் கட்சி நிகழ்வுகள் குறித்து எந்தவித தகவலையும் நிர்வாகிகளுக்கு முறையாக தெரிவிப்பதில்லை என குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த திருமண மண்டபத்திற்கு நிர்வாகிகளை அழைத்து சென்று தனி அறையில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் மற்றும் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பூபதி ஆகிய இருவரையும் சமராச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
 பின்னர் அறையிலிருந்து வெளியே வந்த போது முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தரப்பு, நிர்வாகி மாவட்ட பிரதிநிதி மோகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தரப்பு நிர்வாகி நகர செயலாளர் வினோத் இருவரும் அமைச்சர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதை எடுத்து அமைச்சர் இருவரையும் சமாதானமும் செய்துவிட்டு அங்கிருந்து கார் ஏரி சென்றார்.
 
                        2 months ago
                                32
                    








                        English (US)  ·