ARTICLE AD BOX
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து கரம்பிடித்தார். நடிகர் தனுஷ், திருமணம் செய்த சமயத்தில் 3 படங்கள் மட்டுமே நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்தார்.
மகளின் விருப்பத்திற்கு இணங்கிய ரஜினிகாந்த், திருமணத்தை ஜாம் ஜாம் என்று நடத்தினார். ரஜினியின் மருமகன் என்ற பெயரில், தனுஷ் தனது திறமைகளை மேலும் வளர்த்தார்.
நடிப்பது மட்டுமல்லாமல், இயக்கம், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமையை வளர்த்து கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சென்று பட்டிதொட்டி எங்கும் பரவலாக பேசப்பட்டார்.
நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனால் இந்த ஜோடிக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. திடீரென இருவரும் பிரிவதாக முடிவெடுத்தனர். இது ரஜினி குடும்பத்துக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கே பேரதிர்ச்சியாக அமைந்தது.
இருவரும் கோர்ட்டில் வாதாடி பரஸ்பரமாக மனம் ஒத்து பிரிந்தனர். இவர்கள் பிரிவுக்கு பல காரணம் கசிந்தாலும், ஈகோதான் பிரச்சனை என கூறப்படுகிறது.
இருவரும் சேர்ந்த 3 படத்தில் பணியாற்றிய போது, அப்பட பிரமோஷன் நிகழ்ச்சிகக்காக ஒரு சேனலில் நடத்திய நேர்காணலில் இருந்து பிரச்சனை வெடித்தாக கூறப்படுகிறது
அதாவது, ஒய் திஸ் கொலவெறி பாடலில் பெண்களை பற்றி தப்பாக எழுதியுள்ளாரே தனுஷ் என ஐஸ்வர்யாவிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், அவர்கள் ஒரு அளவுக்கு உண்மைய சொல்கிறார்கள, ஆனால் நாங்கள் (பெண்கள்) முழுவதுமாக உண்மையை சொன்னால் அவர்களால் தாங்க முடியாது என கூறினார்.
இது குறித்து உடனடியாக பதில் சொன்ன தனுஷ், நீங்க ஓரளவுக்கு உண்மையைொல்லுங்க, பொய் சொல்லுங்க, எங்களுக்கு அதை பற்றி கவலையில்லை, பாதிக்கப்பட்ட நாங்க பாட்டு பாடுறோம், உங்களுக்கு என்ன பிரச்சனை, பிடிச்சா கேளுங்க, பிடிக்காவிட்டால் கேட்காதீர்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த பிரச்சனை தான் இருவருக்கும் இடையே ஈகோ ஏற்பட் காரணம் என கூறப்படுகிறது. இருவரையும் சேர்த்து வைக்க ரஜினி குடும்பம் எத்தனையோ முயற்சி செய்து முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.