உதயநிதி ரகசியத்தை சொல்லிவிட்டார்… இனி எங்களுக்கு எட்டாக்கனிதான் : டிடிவி ஆதரவால் பரபரப்பு!

2 hours ago 3
ARTICLE AD BOX

ஸ்ரீவல்லிப்புத்தூரில் மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்டுவது குறித்த எடப்பாடியின் பேச்சு குறித்து பதிலளித்துள்ளது தொடர்பான கேள்விக்கு ? அமமுக தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கக்கூடிய இயக்கம்.

2021 சட்டமன்ற தேர்தலின் போது தேவர் திருமகனாரின் பெயர் மதுரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும் எனவும் தேவர் பெருமகனாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் எனவும் தென் தமிழக மக்களின் நீண்ட ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை எங்களது தேர்தல் வாக்குறுதியிலே சொல்லி இருக்கிறோம்

இந்த நேரத்தில் நயவஞ்சகத்தனமாக பழனிச்சாமி எப்படி போன தேர்தலுக்கு முன்பு 2021 சட்டமன்ற தேர்தலில் 10.5 சதவீதத்தை அறிவித்து ஏழரைத்தனமாக செய்த அரசியல் தவறு. தென் தமிழ்நாட்டில் உள்ள வாழ்கின்ற 105 சமூக மக்கள் பொங்கி எழுகின்ற சூழ்நிலை உருவானது.

சமூக அமைதி கெடுக்கின்ற அளவிற்கு போராட்டங்கள் நடைபெற்றது பழனிச்சாமி இங்கு வரும்போது எல்லாம் அவருக்கு எதிராக எப்படி எல்லாம் கோஷங்கள் எழுப்பப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரியும்

அந்த கருத்துக்களின்அடிப்படையில் நான் சொன்னதை ஏதோ பழனிச்சாமி சொன்னதற்கு எதிர்த்து சொன்னதை அரசியலுக்காக சொன்னதாக சிலர் தவறாக புரிந்து கொண்டு தூண்டப்பட்டு செய்திருக்கிறார்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இன்றைக்கும் சொல்கிறேன் எல்லா சமுதாயங்களுக்கும் பொதுவான இயக்கமாக செயல்பட்டு வருகிறது

நயினார் நாகேந்திரன் எனது நீண்ட நாள் நண்பர் நாங்கள் அம்மா இருக்கும்போது ஒன்றாக பயணித்தோம் இப்போது தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை வருத்தமும் இல்லை அவருடைய செயல்பாடுகள் ஓபிஎஸ் விவகாரத்தில் அவர் நடந்து கொண்டது அதனைத் தொடர்ந்து அதைப் பற்றி பதில் சொன்ன பிறகும் அவர் மீண்டும் பேசியதற்கு பதில் சொன்னேனே தவிர அதோடு அது முடிந்துவிட்டது.

நயினார் நாகேந்திரன் நல்ல நண்பராக என்றைக்கு வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். துணை முதல்வர் உதயநிதி அவர்கள் அருமையான கருத்தை சொல்லியிருக்கிறார்கள் எங்களது வெற்றியின் ரகசியமே பழனிச்சாமி தான்.

பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக நீடிக்க வேண்டும் அவர் நூறாண்டுகள் வாழ வேண்டும் அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் வெற்றி எங்களுக்கு சுலபம் என சொல்கிறார் அவர்களுக்கு கூட்டணி என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பழனிச்சாமி என்பதுதான் அவர்களுடைய வெற்றியின் ரகசியம் என்பதை சொல்லி இருக்கிறார்

அம்மாவின் தொண்டர்கள் அண்ணா திமுகவை ஒன்றிணைக்க செய்பவர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் பழனிச்சாமி பொதுச் செயலாளராக இருக்கும் வரை அது திமுகவிற்கு வெற்றியை தரும் என்று துணை முதலமைச்சர் சொன்னதை நீங்கள் வேண்டுமானால் வேறு மாதிரியாக பார்க்கலாம் அவர் உண்மையை சொல்லி இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் சிலேடையாகவோ வஞ்சப்புகழ்ச்சியாகவோ சொல்லியிருந்தாலும் உண்மை அதுதான் ; உறுதியாக பழனிச்சாமி என்ற சுயநலம் மிக்க துரோக சிந்தனை உள்ள மனிதன் இருக்கும் வரை அண்ணா திமுகவின் பொதுச் செயலாளராக இருக்கும் வரை அண்ணா திமுக ஆட்சிக்கு வராது என்பதுதான் உண்மை.

  • பாக்ஸ் ஆஃபிஸில் குழி தோண்டி படுத்த அனுஷ்காவின் காட்டி? அடி ரொம்ப ஓவரோ?
  • Continue Reading

    Read Entire Article