ARTICLE AD BOX
தொகுதி மக்களை சந்திக்க உதயநிதி வருகையை முன்னிட்டு குடிசை பகுதிகள், திரைச்சீலையால் மறைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: தமிழ் கடவுள் முருகனுக்கு நெருக்கமானவன் நான்தான்.. அமைச்சர் எ.வ.வேலு புது விளக்கம்!
சேப்பாக்கம் தொகுதி மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி வருகை புரிந்தார். அவரது வருகையையொட்டி, பக்கிங்காம் கால்வாய் மற்றும் ஏழைகளின் குடிசைகளை மறைக்க இருபுறமும் திரைச்சீலைகள் கொண்டு மறைக்கப்ப்டடது.
ஒருபுறம் பக்கிங்காம் கால்வாய் மற்றொருபக்கம் குடிசை பகுதிகளை துணியால் மறைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
மதுரைக்கு கடந்த மே 31ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ சென்ற போது, பந்தல்குடி கழிவு நீர் கால்வாய் துணிகள் கொண்டு மறைக்கப்பட்டது பேசு பெருளானது. பின்னர் துணி அகற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.