ARTICLE AD BOX
வக்பு வாரிய சட்டம் மீதான தீர்மானம் குறித்த விவாதத்தில் Absent ஆன ஸ்டாலின் மாடல் அரசின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இஸ்லாமிய விரோதியா? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: தமிழக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்றைய விவாதத்தின்போது, இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் வக்ஃப் வாரியச் சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் வகையிலான தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து, அதன் மீது விவாதம் நடத்தப்பட்டது.
ஆனால், இன்றைய நிகழ்வில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. இதனைச் சுட்டிக்காட்டி திமுக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “இஸ்லாமியர் விரோதி அடிமை பழனிச்சாமி. இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இன்று, சட்டப்பேரவை நிகழ்வுகளில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை.
குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்து தொடங்கி இன்னும் எத்தனை எத்தனை விரோதங்களை செய்யப் போகிறீர்கள் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு கார் விட்டு கார் மாறி பயணித்த அடிமைச்சாமி அவர்களே?” எனக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், அதேநேரம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வராததைச் சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துள்ள அதிமுக ஐடி விங், “சொந்த துறையின் மானிய கோரிக்கைக்கே பயந்து போய் “காய்ச்சல்” என்று பம்மாத்து சாக்கு சொல்லி வீட்டிலேயே போர்த்திக் கொண்டு படுத்துறங்கும் பயந்தநிதி வராததை மறைக்க என்னென்ன உருட்டு.
இதையும் படிங்க: எதிர்பார்ப்பை எகிற வைத்ததா மோகன்லாலின் ‘எம்புரான்’…படத்தின் விமர்சனம் இதோ.!
இன்று வக்பு வாரிய சட்டம் மீதான தீர்மானம் குறித்த விவாதத்தில் Absent ஆன ஸ்டாலின் மாடல் அரசின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இஸ்லாமிய விரோதியா? கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த கழக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் பூதஉடலுக்கு அஞ்சலி செலுத்த நெல்லை சென்றுள்ளார் என்பதை நாடறியும்.
முரசொலி தவிர மத்த செய்திகளையும் படித்து அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் கொத்தடிமைகளே” எனக் காட்டமாகக் கூறியுள்ளனர். ஏற்கனவே, இபிஎஸ் டெல்லி சென்ற நிகழ்வை தொடர்ந்து ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு விதமாக கூறி வருவதும் கவனிக்கப் பெற்றுள்ளது.

7 months ago
67









English (US) ·