உதயநிதிக்கு ஜால்ரா போடவா? கடுப்பான Ex அமைச்சர்.. மதுரையில் பரபரப்பு பேச்சு!

1 month ago 33
ARTICLE AD BOX

திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை: மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கண்ணனூர், மு.ஆண்டிப்பட்டி, கருமாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், “தமிழகத்தில் பூத் கமிட்டியைப் பொறுத்தவரையில் அதிமுக மிகவும் பலமாக இருக்கிறது. மிக அற்புதமாக அதனை எடப்பாடி பழனிசாமி வடிவமைத்தள்ளார். மக்கள் கொலை செய்யப்படுகிகின்றனர், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலரின் உயிர் பறிக்கப்படுகிறது.

போதைப்பொருள் விற்பனை அதிகமாக இருக்கிறது. பிரதான எதிர்கட்சியான அதிமுக, இந்தச் சம்பவங்களை அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறது. இது எதிர்கட்சித் தலைவரின் கடமை. ஆனால், இதைப் பற்றி விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுக்கிறார்.

RB Udhayakumar

உள்துறையைக் கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் இதற்கு பதில் அளிக்கவில்லை. ஆனால், கேள்வி கேட்ட முறை சரியில்லை எனக் கூறுகிறார்கள். அப்படி என்றால், வெற்றிலை பாக்கு வைத்து மேளதாளம் சீர் வரிசை வைத்து, உசிலம்பட்டியைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார் கொலைக்கு காரணம் கூறுங்கள்? என்றா கேட்க முடியும்.

இதையும் படிங்க: பதில் சொல்லுங்க.. பதறி ஓடிய அமைச்சர்.. சட்டென முடிந்த திமுக ஆர்ப்பாட்டம்!

பிரதான எதிர்கட்சித் தலைவர் கேள்வி கேட்காமல், ஆளும்கட்சித் தலைவர் ஸ்டாலினா அரசை நோக்கி கேள்வி எழுப்ப முடியும். எதிர்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு முதலமைச்சரால் பதிலளிக்க முடியவில்லை. உதயநிதி பேசும்போது சட்டப்பேரவையில் அதிமுக இருக்கக் கூடாது என திமுக திட்டமிடுகிறது.

ஏனென்றால், குறுக்கே கேள்வி கேட்பார்கள். அதற்கு அவரால் பதில் சொல்ல இயலாது. எனவே, சபைக் காவலரை வைத்து எங்களை வெளியே தூக்கிப்போட்டனர். பட்டத்து இளவரசர் உதயநிதி சிறப்பாகப் பேசுகிறார், அழகாகப் பேசுகிறார் என்று திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களைப் போல் ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை. குற்றம் குறைகளைத் தோலூரித்துக் காட்டவே மக்கள் எங்களை சட்டப்பேரவைக்கு அனுப்பியுள்ளனர்” எனக் கூறினார்.

  • Veera Dheera Sooran Box Office Collection இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!
  • Continue Reading

    Read Entire Article