உதவி கேட்ட பெண்ணுடன் உல்லாசம்… லட்ச லட்சமாக கொட்டிய பணம் : காக்கிச்சட்டையின் கோர முகம்!

1 month ago 25
ARTICLE AD BOX

உதவி கேட்டு வந்த பெண் பலமுறை பலாத்காரம் செய்து மிரட்டிய காவலரின் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கேம் தொட்டி பகுதியை சேர்ந்த காவல் நிலையத்தில் 112 அவசர உதவி மைய வாகன ஓட்டுநராக புட்டசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த பெண் தகராறு ஏற்படுவதாக அவரச உதவி 112க்கு போன் செய்து கூறியுள்ளார். உடனே விசாரணை நடத்த சென்ற புட்டசாமி, விசாரணையை முடித்து, அந்த பெண் கணவரை பிரிந்து தனிமையில் வசிப்பதை அறிந்து கொண்டார்.

பின்னர் அந்த பெண்ணிடம் பழகி மொபைன் நம்பரை வாங்கியுள்ளார். பின்னர் நேரில் சந்திக்க வலியுறுத்தியதால், அந்த பெண் நேரிலும் சென்றுள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது காவலர் எல்லை மீறியுள்ளார்.

மேலும் பணம் வேண்டும் என பெண்ணிடம் சுமார் ரூ.12 லட்சம் வரை கடனாக வாங்கியுள்ளார். பணத்தை திருப்பி கேட்ட போது, புட்டசாமி பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண், தற்கொலை செய்ய முயன்றுள்ளார். பின்னர் உறவினர்களால் காப்பாற்றப்பபட்ட பின்னர், காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

அந்த புகாரில், பலமுறை புட்டசாமி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், தன்னிடம் இருந்து வாங்கிய ரூ.12 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்க மறுக்கிறார் என கூறியுள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான புட்டசாமியை தேடி வருகின்றனர். இதையடுத்து காவலரை தேடி காவலர்களே விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Bayilvan ranganathan said that actress honey rose is a transgender  அந்த நடிகை ஒரு திருநங்கை? ஜீவா பட ஹீரோயின் பற்றி கண்டபடி பேசிய பயில்வான் ரங்கநாதன்…
  • Continue Reading

    Read Entire Article