ARTICLE AD BOX
என்னால் உயிர் வாழ முடியாது, தயவு செய்து விஷமாவது கொடுங்கள் என சிறையில் உள்ள நடிகர் நீதிபதியிடம் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் தர்ஷன். சமீபத்தில், சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் கொலை வழக்கில் பெங்களூரு காமாட்சிபாளையா காவல்துறையால் கைது செய்யப்பட்ட அவர், தற்காலிக ஜாமீனில் வெளியே வந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால் அது ரத்து செய்யப்பட்டு, தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்று, செப்டம்பர் 9, 2025 அன்று, இந்த வழக்கின் மாதாந்திர விசாரணையின் போது, தர்ஷன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் 65-வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார்.
விசாரணையின் போது அவர் தனது சிறை வாழ்க்கையை பற்றி உருக்கமாக பேசினார். “பல வாரங்களாக சூரிய ஒளியை காணவில்லை. என் உடல் நிலை மோசமடைந்து, கைகளில் பூஞ்சை பரவியுள்ளது. இந்த சூழ்நிலையில் எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது,” என்று அவர் நீதிபதியிடம் தனது நிலையை விளக்கினார்.

இதை கேட்ட நீதிபதி , “சட்ட விதிகளுக்கு உட்பட்டு உங்களுக்கு தேவையான நிவாரணம் கிடைக்கும்,” என்று உறுதியளித்தார். பின்னர், சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, தர்ஷனுக்கு தனி படுக்கை மற்றும் தலையணை வழங்கவும், சிறை விதிகளின்படி நடைபயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கவும் உத்தரவிட்டார்.
மேலும், அவரது உடல் நலனை கண்காணிக்க மருத்துவ குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
