ARTICLE AD BOX
திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பூவரசூரைச் சேர்ந்தவர் மிகாவேல். சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறையில் காவலராக பணியை தொடங்கிய இவர், திருச்செந்தூர் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார்.
ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது அதே பகுதியை சேர்ந்த உறவுக்கார சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர், தூத்துக்குடி மற்றும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவர், விதவை பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக புகார் எழுந்தது.
அந்த வழக்கில் 6 மாதங்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போக்சோ சட்டத்தின் கீழ் காவலர் மிகாவேல் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள காவலர் மிகாவேல் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பணிபுரிந்தபோது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறி அவரை நீதிமன்ற உத்தரவுபடி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்காக காத்திருந்து வருகின்றனர். அந்த பரிசோதனை முடிவு வரும் பட்சத்தில் காவலர் மிகாவேல் மீது மேலும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
