ARTICLE AD BOX
போனியாகாத குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் அஜித் ரசிகர்களின் மத்தியில் கொண்டாடப்பட்ட திரைப்படமாக அமைந்தது. வெகுஜன ரசிகர்களை இத்திரைப்படம் ஈர்க்கவில்லை என்றபோதும் அஜித் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ரூ.240 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்த இத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியிருந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமம் வியாபாரம் ஆகாமலே இருந்தது. சன் தொலைக்காட்சி நிறுவனம் இத்திரைப்படத்தின் சேட்டலைட் உரிமத்தை வாங்க முன்வந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த முடிவு கைவிடப்பட்டது. இவ்வாறு இரண்டு மாதங்களாக இத்திரைப்படத்தின் சேட்டலைட் உரிமம் விற்கப்படாமலே இருப்பதாக கூறப்படுகிறது.
விலைக்கு வாங்கிய முன்னணி சேன்னல்?
இந்த நிலையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் சேட்டலைட் உரிமத்தை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி கைப்பற்றிவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இரண்டு மாதங்களாக எந்த தொலைக்காட்சியும் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை வாங்க முன் வராத நிலையில் தற்போது ஸ்டார் விஜய் டிவி விலைக்கு இதன் சேட்டலைட் உரிமத்தை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து விரைவில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எனவும் கூறப்படுகிறது.

4 months ago
56









English (US) ·